ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம்

ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டுவருகிறது

Update: 2018-08-01 12:52 GMT
குழந்தைகளின் உடலுக்கு தேவையான சத்துகள் அனைத்தும் இருப்பது தாய்ப்பாலில் மட்டும் தான்.பிறந்த குழந்தைக்கு தாயின் ஸ்பரிசமும், கூடவே தாய்ப்பாலும் தான் அவசியம்.ஆரோக்யமான குழந்தைகள் உங்கள் வீடுகளில் உருவாக வேண்டும் என்றால் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை.

பொதுவாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்து பல பெண்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்ப்பால் குறைவாக சுரக்கும் பெண்கள் எல்லாம் பார்முலா மில்க், பசும்பாலை  குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் ஆரோக்யம் என்பது கேள்விக்குறியாகிறது. 

குழந்தைகள் பிறந்த உடனே தாய்க்கு சுரக்கும் சீம்பால் என்பது எல்லா சத்துகளை உள்ளடக்கியது என்பதால் அதனை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Tags:    

மேலும் செய்திகள்