இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் - விடுதி வார்டன் புனிதாவிற்கு 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
கோவை மகளிர் விடுதியில் உள்ள இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் தொடர்பாக விடுதி வார்டன் புனிதாவிற்கு வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண்களை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக வார்டன் புனிதாவை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து நீதிபதி கண்ணன், புனிதாவுக்கு வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இந்தநிலையில், நீதிமன்றம் முன் திரண்ட மாதர் சங்கத்தினர், புனிதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.