தமிழகம் ஜனநாயக நாடா அல்லது காவல்துறை ஆட்சி செய்யும் சர்வாதிகார நாடா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் ஜனநாயக நாடா அல்லது காவல்துறை ஆட்சி செய்யும் சர்வாதிகார நாடா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
*தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கைதாகி ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது.
*இதனை ரத்து செய்யக் கோரி அவரின் மனைவி சத்யபாமா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
*இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
*ஜாமினில் விடுதலை செய்யப்பட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடுவது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
*இதனை கேட்டறிந்த நீதிபதிகள், தமிழகம் ஜனநாயக நாடா அல்லது போலீஸ் ஆட்சி செய்யும் சர்வாதிகார நாடா என கேள்வி எழுப்பினர்.
*இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
*இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.