மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியன் - நேரில் சென்று நலம் விசாரிக்கும் கட்சி தலைவர்கள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள விஐபிக்கள் பிரிவில் தா.பாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள விஐபிக்கள் பிரிவில் தா.பாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்றைய தினம், பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினரகன் ஆகியோர் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.