உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை திங்கட்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை திங்கட்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு

Update: 2018-07-31 05:44 GMT
உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வரும் திங்கள் கிழமைக்குள் தாக்கல் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை எனவும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன் எனவும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசுடன் ஆலோசித்து வருவதால், கால அவகாசம் வழங்குமாறு  மாநில தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் திங்கள்கிழமைக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். 

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை திங்கட்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு

Tags:    

மேலும் செய்திகள்