ஆன்மீக பூமி பலாத்கார பூமியாகி விட்டது - சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்மீக பூமி, பலாத்கார பூமியாகி விட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Update: 2018-07-31 02:21 GMT
அறுபது வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி கிருபாகரன், காணொலி காட்சி மூலம் விசாரித்தார். அப்போது மத்திய அரசு தரப்பில் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து உரிய பதிலளிக்கவில்லை. இது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சமீப காலமாக அதிகரித்து வரும் பலாத்கார குற்றச் சம்பவங்களை மேற்கோள்காட்டினார். ஆன்மீக பூமி என்று அழைக்கப்பட்ட இந்தியா, தற்போது பலாத்கார பூமி என்ற அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டதாக வேதனை தெரிவித்தார். காம மிருகங்கள், குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை என்றும், இதற்கு  சமூகம்  மற்றும்  சம்பந்தப்பட்ட   மனிதனின் உளவியல் ரீதியான பிரச்னைகளே  காரணம்  என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அடுத்த விசாரணையின்  போது  கேள்விகளுக்கு பதிலளிக்காவிட்டால்,  மத்திய உள்துறை மற்றும் மாநில உள்துறை செயலாளர்கள்,மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டி வரும் என எச்சரித்து வழக்கை ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்