எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை கண்காணிக்க சிபிஐ சிறப்பு குழு அமைக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை கண்காணிக்க சிபிஐ சிறப்பு குழு அமைக்க முடியாது என்றும், சிறந்த மருத்துவ சேவை வழங்குவதையே ஊக்குவிக்க முடியும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2018-07-25 05:07 GMT
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகவும், அதனை சிபிஐ சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும்  மனுவில் கூறியிருந்தார். மேலும் மருத்துவமனை வேலை வாய்ப்பில் 35 சதவீதம்,தமிழ்நாட்டில்உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, எந்த அடிப்படையில் தமிழகத்திற்கு 35 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,சிறந்த மருத்துவர்களை நியமித்து,  சிறந்த மருத்துவ சேவை வழங்குவதை மட்டுமே ஊக்குவிக்க முடியும் எனவும், சிபிஐ சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்பதை ஏற்று கொள்ள முடியாது எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்