காவலரை கத்தியால் குத்திய மணல் கடத்தல் கும்பல் - படுகாயமடைந்த காவலருக்கு தீவிர சிகிச்சை

உளுந்தூர்பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை, மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-07-23 09:20 GMT
இருவேல்பட்டு கிராமத்தில், திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் செந்தில்குமார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில், பேட்டரி எடுத்து வந்த 3 இளைஞர்களை மறித்து, செந்தில்குமார் விசாரித்துள்ளார்.  மூவரும் முன்னுக்கு  பின் முரணான தகவல்கள் அளித்ததை அடுத்து, அவர்களை காவல் நிலையத்திற்கு வருமாறு செந்தில் குமார் அழைத்ததாகவும், ஆனால் அதற்கு மறுத்த 3 பேரும், அவரது கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து படுகாயமடைந்த செந்தில் குமாருக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில்குமாரை கத்தியால் குத்தியவர்கள், மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெயப்பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்