"குறுஞ்செய்திகள் மூலம் சர்க்கரை நோயை குறைக்கலாம்" - சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் ஆய்வில் தகவல்
உணவு பழக்கம், வாழ்க்கை முறை குறித்து, மொபைல் போன்களில் குறுஞ்செய்திகள் அனுப்புவதன் மூலம் சர்க்கரை வியாதியை தடுக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
சர்க்கரை நோயை தடுப்பது குறித்து, சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ள நபர்களை தேர்வு செய்து, ஒரு பிரிவினருக்கு மருத்துவ ஆலோசனையும், மற்றொரு பிரிவினருக்கு மொபைல் மூலம், உணவு பழக்கம், வாழ்க்கை முறை போன்றவை குறித்து அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பியும் பரிசோதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், உணவு பழக்கம், வாழ்க்கை முறை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட குழுவில் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 36 சதவிதம் குறைவாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.