"வங்கக் கடலில் 60 கி.மீ வேகத்துடன் காற்று வீசும்" - மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

வங்ககடலில் மணிக்கு 60கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசுவதால், தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-07-15 14:13 GMT
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது. தென் மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் நீலகிரி கோவை,தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஒடிசா கடற்கரை பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. வங்ககடற்பகுதியில் 60கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த தரை காற்று வீசும் என்பதால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்