லோக் ஆயுக்தா மசோதா : திமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் வெளிநடப்பு - ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகள் மீதான புகார், டெண்டர் முறைகேடு மீதான புகார் உள்ளிட்டவைகள் மீது லோக் ஆயுக்தா சட்டமுன்வடிவில் விசாரிக்க முடியாது - ஸ்டாலின்

Update: 2018-07-09 11:23 GMT
லோக் ஆயுக்தா மசோதாவை, தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறினார். 

* லோக் ஆயுக்தா சட்டமுன்வடிவை தேர்வுக்குழுவிற்கு அனுப்பாததை கண்டித்து வெளிநடப்பு செய்தோம் - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்

* மற்ற மாநிலங்களைப் போல் முதல்வரையும் சேர்க்கும் வகையில் லோக் ஆயுக்தா சட்டமுன்வடிவில் தெளிவில்லை - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்

* சட்டமுன்வடிவை தேர்வுக்குழுவிற்கு அனுப்பி, அதன்பின் விவாதித்து ஒரு முடிவுக்கு வரலாம் - ஸ்டாலின்

* லோக் ஆயுக்தாவில் தகவல் கொடுப்போருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான ஷரத்து சேர்க்கப்பட வேண்டும் - ஸ்டாலின்.


Tags:    

மேலும் செய்திகள்