லோக் ஆயுக்தா மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் வரை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2018-07-09 11:15 GMT
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பது குறித்து 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில்  அமைச்சர் ஜெயக்குமார் லோக் ஆயுக்தா  மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதா​வில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விளக்கி பேசினார். இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவையில் மசோதா மீது விவாதம் நடைபெற்றது.

மசோதா வலுவானதாக இல்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அதை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்ததை அடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து லோக் ஆயுக்தா
மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்