மரபணுப் பிறழ்ச்சி நோயால் அவதியுறும் இளைஞரை காக்க போராடும் குடும்பம்
ஒசூர் அருகே மரபணுப் பிறழ்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரை காப்பாற்ற பெற்றோர் போராடி வருகின்றனர்.
பிலுகுண்டுலு கிராமத்தை சேர்ந்த மீனவர் கந்தராஜின் மூன்றாவது மகன் அருண்குமார் கடந்த 11 ஆண்டுகளாக மரபணுப் பிறழ்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய்க்கு ஏற்கனவே, இரு பிள்ளைகளை பறி கொடுத்த பெற்றோர், மூன்றாவது பிள்ளையை காக்க தினந்தோறும் போராடி வருகின்றனர். மகனுக்கு சிகிச்சை அளிக்க போதிய நிதி வசதியில்லாமல் சிரமப்படுவதாக கந்தராஜ் தெரிவித்துள்ளார்.
உரிய சிகிச்சை எடுக்காவிட்டால், வில்சன் நோய், கல்லீரல், சிறுநீரகம், மூளை என ஒவ்வொரு உறுப்புகளை பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மரபணு பிறழ்ச்சியால் பாதிக்கப்பட்ட அருண்குமாரின் சிகிச்சைக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என்பதே பெற்றோரின் கோரிக்கையாகும்.