25 புதிய 108 அவசர கால ஊர்திகள் வழங்கும் நிகழ்ச்சி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை குடும்ப நலத்துறைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று. ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 5 கோடி ரூபாய் மதிப்பில் 25 புதிய 108 ஆம்புலன்ஸ் மற்றும் 9 ஜீப் வாகனங்களை, குடும்ப நலத்துறைக்கு அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.