"மனசாட்சியே இல்லையா?" - அதிர்ந்து போன அதிகாரிகள் - 20 கிலோ கெட்டு போன இறைச்சி-கரூரில் பரபரப்பு

Update: 2023-09-21 08:18 GMT

கரூரில் உணவகங்களில் சோதனையிட சென்ற அதிகாரிகளிடம் உணவக உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

கோவை சாலையில் உள்ள உணவகங்களில் நடந்த சோதனையின்போது, கொத்து புரோட்டா செய்வதற்காக குப்பை தொட்டி அருகில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

80 அடி சாலையில் அமைந்துள்ள கடை ஒன்றில் சோதனைக்கு சென்ற அதிகாரிகளிடம் கடையின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று நடைபெற்ற சோதனையில் சுமார் 20 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்