மதுரையில் வேட்டைக்கு சென்ற பிளஸ் 2 மாணவர் துடிதுடித்து பலி - காப்பாற்ற சென்றவருக்கும் நேர்ந்த கதி

Update: 2023-08-24 09:24 GMT

மதுரை திருமங்கலம் அருகே, முயல் வேட்டைக்குச் சென்ற பள்ளி மாணவர் உட்பட இருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

திருமங்கலம் நாகையாபுரம் அருகே இடையபட்டி மற்றும் அலப்பலச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் 6 பேர், இரவில் முயல் வேட்டைக்குச் சென்றனர். இடையபட்டி கண்மாய் பகுதிக்குள் சென்றபோது, அங்கு காட்டுப்பன்றிக்காக மின்வேலி வைக்கப்பட்டிருந்ததை அறியாமல், கம்பியில் கால் வைத்தபோது மின்சாரம் தாக்கியது. இதில், அலப்பலச்சேரியைச் சேர்ந்த அனுமந்த், இடையபட்டியைச் சேர்ந்த கருப்பசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்றச் சென்ற மனோஜ் என்பவர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அனுமந்த் +2 மாணவர் என்பதும், கருப்பசாமிக்கு திருமணமாகி கைக் குழந்தை இருப்பதும் தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மின்வேலி அமைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்