சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் குறித்து, 2 நாட்கள் ஆய்வுப் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்க உள்ளார்.
மாவட்டம் வாரியாக வளா்ச்சித் திட்டப் பணிகள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளார். ஆய்வுப் பணியின்போது, பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளுக்கு முன்னுரிமை தரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், சென்னை, தாம்பரம், ஆவடி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு நிலவரங்கள் தொடா்பாகவும், காவல்துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளாா். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.