2 நாள் நடந்த ED ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள் | ED RAID | Pudukottai
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளில் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் மணல் குவாரி ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். அவருக்குச் சொந்தமான எட்டு இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், 4 இடங்களில் சோதனை முடிவடைந்துள்ளது. ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் மற்றும் மற்றொரு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் ஏற்கனவே மூன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு குழு சோதனைக்காக அவரது அலுவலகத்திற்குள் சென்றுள்ளனர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதாகவும், அவற்றை எடுத்துச் செல்லும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, புதுக்கோட்டையில் கர்ணன் என்ற அரசு ஒப்பந்ததாரரின் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.