கயிற்றால் துடிதுடித்து பலியான 12 வயது சிறுவன் - சென்னையில் பயங்கரம்

Update: 2023-09-30 15:36 GMT

சென்னை கண்ணகி நகரில் பெயிண்டராகப் பணியாற்றும் வேலாயுதம் - மகாலட்சுமி தம்பதியின் இளைய மகனான 12 வயது சிறுவன் செல்வா பள்ளி முடிந்து வீடு திரும்பி வாசலில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்... அப்போது தவறுதலாக கழுத்தில் இறுக்கி மூச்சுத் திணறி செல்வா மயங்கியுள்ளார்... உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்