மதுரையை பயமுறுத்திய கனமழை.. தண்ணீரில் மூழ்கிய அடையாளம் | Madurai | Rain

Update: 2024-10-13 06:55 GMT

மதுரையை பயமுறுத்திய கனமழை.. தண்ணீரில் மூழ்கிய அடையாளம்

#Madurai | #Rain | #thanthitv

மதுரையில் நேற்று பெய்த கனமழையால் கருடர் பாலம் பகுதி தண்ணீரில் மூழ்கியது. இந்த பகுதியில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதில் நான்கு புறங்களிலும் பேரி கார்டு அமைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிம்மக்கல்லில் இருந்து ஆரப்பாளையம் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

ராமநாதபுரத்தில் இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியது.

குழந்தைகள் வார்டு, மகப்பேறு வார்டு மற்றும் அம்மா உணவகம் ஆகிய பகுதிகளில் சூழ்ந்த மழைநீரால் மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோர் அவதி அடைந்தனர்.

கரூர் மாவட்டம் ஆரியம்பட்டி கிராமத்தில் இரவு நேரத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சாலை ஓர வீடுகள், வயல் வெளிகள், அரசுப்பள்ளி வளாகம், சாலைகள் ஆகியவற்றில் மழைநீர் தேங்கியது. கிராமத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. காலை வேளையில் பால் கறக்கும் விவசாயிகள், பால் கேனை வைப்பதற்கு கூட இடமின்றி தவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்