வெற்றி முனைப்பில் சேப்பாக்... வெல்லப்போவது யார்?

Update: 2024-07-28 07:13 GMT

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. திண்டுக்கல்லில் இன்று மதியம் 3.15 மணிக்கு தொடங்கும் 27வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதவுள்ளன. சேப்பாக் அணி ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேற முனைப்பு காட்டக் கூடும். இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 28வது மற்றும் கடைசி லீக் போட்டியில் திண்டுக்கல் மற்றும் நெல்லை அணிகள் மோதவுள்ளன. திண்டுக்கல்லும் 2வது இடத்தைப் பிடிக்க முயற்சிக்கும் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்