ஒயிட்வாஷ் ஆனதால் சிக்கல்.. இந்தியா உயிர் ஆஸி., கையில்.. இது நடந்தால் தான் பைனலில் நுழைய முடியும்

Update: 2024-11-04 08:32 GMT

ஒயிட்வாஷ் ஆனதால் சிக்கல்.. இந்தியா உயிர் ஆஸி., கையில்.. இது நடந்தால் தான் பைனலில் நுழைய முடியும்

நியூசிலாந்திடம் இந்தியா ஒயிட்வாஷ் ஆகியிருக்கும் சூழலில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா என்பது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

நியூசிலாந்திடம் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இந்தியா இழந்து இருக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 62 புள்ளி 50 சதவிகித புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 58 புள்ளி 33 சதவிகித புள்ளிகளுடன் இந்தியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற வேண்டும் என்றால்,, அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய அவசியத்தில் இந்தியா உள்ளது.

ஆஸ்திரேலியாவில் வருகிற 22ம் தேதி பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால் நேரடியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிடும்...

ஒரு போட்டியில் தோற்றாலோ அல்லது டிரா செய்தாலோ இலங்கை, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவைப் பொறுத்து இந்தியாவின் வாய்ப்பு அமையும்... ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் தோல்வி அடைந்தால் இந்தியாவின் வாய்ப்பு கானல்நீராகிவிடும்...

நியூசிலாந்து தொடரில் சந்தித்த படுதோல்வி இந்தியாவின் நிலையை மதில்மேல் பூனையாக்கி இருக்கும் சூழலில் ஆஸ்திரேலிய தொடரில் வெற்றிகளைக் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்