அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. டூப்ளின் நகரில் நடைபெற்றப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து, 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. அயர்லாந்து வீரர் லார்கன் டக்கர் அதிகபட்சமாக 51 ரன்கள் அடித்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 17வது ஓவரில் இலக்கை எட்டியது. பாகிஸ்தான் வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் ஃபஹர் சமான் அரைசதம் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் சமன் செய்தது.