டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மாற்றம் தேவை - லியான் கோரிக்கை

Update: 2024-09-06 23:22 GMT

மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, அடுத்தாண்டு ஜூன் 11-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மாற்றம் செய்ய வேண்டுமென, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், இறுதிப்போட்டியை 3 ஆட்டங்கள் கொண்டதாக நடத்தினால் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 3 போட்டிகளையும் 3 நாடுகளின் வெவ்வேறு மைதானங்களில் நடத்தினால், இரு அணிக்கும் சம வாய்ப்பாக இருக்கும் என்றும் லியான் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்