இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி.. ரசிகர்களுக்கு இடியை இறக்கிய நியூஸ் | Thanthitv

Update: 2024-10-16 16:33 GMT

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. பெங்களூருவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சின்னசாமி மைதானம் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. இதனால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. 2ம் நாள் ஆட்டம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மழை நீடித்தால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்