இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்.. கைவிரித்த பேட்ஸ்மேன்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்டின் 2வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 219 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல்நாள் ஆட்ட நேர முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி, இன்று 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி வீரர் ஜோ ரூட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் எடுத்தார். ராபின்சன் அரைசதமடித்தார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களுக்கும், சுப்மன் கில் 38 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் நிலைத்து நின்று ஆடிய ஜெய்ஸ்வால், 73 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்தை விட இந்தியா, 134 ரன்கள் பின் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. துருவ் ஜூரல் 30 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், நாளை 3ஆம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.