18 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில், ஜெய்ப்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது சிறந்த ஸ்கோரான 183 ரன்களை பதிவு செய்தார். அதில் 15 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் அடங்கும். தோனியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த இன்னிங்ஸ், தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.