ஆசிய ஹாக்கி போட்டி... பாகிஸ்தானுக்கு ஆரம்பமே காத்திருந்த அதிர்ச்சி

Update: 2023-08-04 06:04 GMT

ஆசிய ஹாக்கி போட்டி... பாகிஸ்தானுக்கு ஆரம்பமே காத்திருந்த அதிர்ச்சி

எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் மலேசியா வீரர் அசாரி, அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தார். இதனால் முதல் பாதியில் 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் மலேசியா முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து, 2வது பாதியில் மலேசியா வீரர் ஷெல்லோ கோல் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில், அப்துல் ரெஹ்மான் மட்டும் கோல் அடித்தார். இதனால் ஆட்ட நேர முடிவில், 3க்கு 1 என்ற கோல் கணக்கில் மலேசியா வெற்றி பெற்றது. 3 முறை சாம்பியனான பாகிஸ்தான், ஆரம்ப போட்டியிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்