தென் ஆப்பிரிக்க சைக்கிள் பந்தய போட்டி: ஆடவர் பிரிவில் சரோ-பீர்ஸ் ஜோடி வெற்றி
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரின் கரடு முரடான மலைப் பாதையில் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு, வீரர்-வீராங்கனைகள் அசத்தினர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் 20 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை, சுமார் 43 நிமிடங்களில் கடந்து ஜோர்டான் சரோ - மேத்யூ பீர்ஸ் ஜோடி வெற்றி பெற்றது. இதேபோல், மகளிர் பிரிவில் சினா - லாரா ஜோடி, 54 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி கண்டது.