அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: மகுடம் சூடினார் டேனில் மெத்வதேவ் - அவரின் வெற்றிப் பயணம்...

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதல் முறையாக முத்தமிட்டுள்ளார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்... அவரின் வெற்றிப் பயணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

Update: 2021-09-13 08:36 GMT
டேனில் மெத்வதேவ்....

உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரர்...
13 ஏ.டி.பி. (ATP) டென்னிஸ் தொடர்களை வென்றவர்...
சர்வதேச டென்னிஸ் அரங்கில் குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க நபராக பரிணமித்தவர்...

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை ரஷ்ய வீரர் மெத்வதேவ் பெற்றிருந்தாலும், கிராண்ட்ஸ்லாம் பட்டம் மட்டும் அவருக்கு எட்டாக்கனியாகவே நீடித்தது.

2019-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபனிலும், நடப்பாண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபனிலும் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினார் மெத்வதேவ்...

ஆஸ்திரேலிய ஓபன் தோல்விக்குப் பிறகு பெரிதாக பிரகாசிக்கத் தவறிய மெத்வதேவ், ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபனில் களம் கண்டார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் நான்கு சுற்றுகளிலும், எதிர்த்து ஆடிய வீரர்களிடம் ஒரு செட்டை கூட இழக்காமல் அதிரடி காட்டினார் மெத்வதேவ்...

(1-4 TH ROUND மெத்வதேவ் ஆடியது, ஸ்மால் ப்ரீத்)

தொடர் வெற்றிகளால் காலிறுதியில் கால்பதித்து, அரையிறுதிக்குள்ளும் அட்டகாசமாக நுழைந்த மெத்வதேவ்,

அரையிறுதியில் கனடாவின் இளம் வீரர் ஃபெலிக்சை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்தார்.

இறுதிப் போட்டியில், எதிர்பார்த்ததுபோல் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் வந்து நிற்க, இந்த முறையும் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் மெத்வதேவிற்கு தோல்வி என்றே ரசிகர்கள் எண்ணினார்கள்.

ஏனெனில், 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாறு படைக்கும் முனைப்புடன் மறுமுனையில் காத்திருந்தார் ஜோகோவிச்...

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இறுதிப் போட்டியில் முதல் செட்டை 6-க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் மெத்வதேவ் வெல்ல, வழக்கமான பாணியில் ஜோகோவிச் முதல் செட்டை விட்டுள்ளார் என்றே கருதப்பட்டது.

இருப்பினும் 2-வது செட்டையும் 6-க்கு 4 என்று கைப்பற்றி ஜோகோவிச்சுக்கு அழுத்தம் கொடுத்தார் மெத்வதேவ்...

தொடர்ந்து 3-வது செட்டையும் அதே புள்ளிக் கணக்கில் கைப்பற்றிய மெத்வதேவ், நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்