அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற இங்கிலாந்து வீராங்கனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இங்கிலாந்து நாட்டின் இளம் வீராங்கனை எம்மா ராட்கானு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Update: 2021-09-12 04:30 GMT
 நியூயார்க்கில் நடந்த இறுதிப்போட்டியில், கனடாவின் லேலா பெர்னாண்டஸ்சும், இங்கிலாந்தின் எம்மா ராட்கானுவும் மோதினர்.  இதில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராட்கானு 6க்கு 4, 6க்கு 3 என்ற நேர்செட் கணக்கில், கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸை வீழ்த்தி, கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம் 1977க்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் இங்கிலாந்து வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார் இளம் வீராங்கனை எம்மா ராட்கானு.

Tags:    

மேலும் செய்திகள்