டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி - போராடி தோல்வி அடைந்த இந்திய ஜோடி
டோக்கியோ ஒலிம்பிக்கில், மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா ஜோடி, போராடி தோல்வி அடைந்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கில், மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா ஜோடி, போராடி தோல்வி அடைந்தது. முதல் சுற்று ஆட்டத்தில் சானியா - அங்கிதா ஜோடி, உக்ரைனின் கிச்சொனோக் ஜோடியை எதிர்கொண்டது. இதில், முதல் செட்டை 6-க்கு பூஜ்யம் என சானியா ஜோடி கைப்பற்றியது. 2-வது செட்டை 7-க்கு 6 என டை பிரேக்கரில் உக்ரைனிய ஜோடி வென்றது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு அதிகரித்த நிலையில், மூன்றாவது செட்டையும், டை பிரேக்கரில் 10-க்கு 8 என உக்ரைனிய ஜோடி வென்றது. இதனால், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் சானியா - அங்கிதா ஜோடி வெளியேறியது.