ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை
ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோமதி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது முதற்கட்ட சோதனையில் உறுதியான நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் 4 ஆண்டுகளுக்கு அவர் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதோடு அவர் வென்ற தங்கப்பதக்கமும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கோமதி தெரிவித்துள்ளார்.