மோடெரா ஸ்டேடியத்தை திறந்து வைக்கும் டிரம்ப் - கிரிக்கெட் வீரர்களிடையே மாறுபட்ட கருத்து
ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமரக்கூடிய, குஜராத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைப்பது குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமரக்கூடிய, குஜராத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைப்பது குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அகமதாபாத் கிரிக்கெட் வீரர்கள் சிலர், அதிபர் டிரம்ப் இந்த மைதானத்தை திறந்து வைப்பது பெருமிதம் என்றும், மற்றொரு சிலர் கிரிக்கெட்டை பற்றி தெரியாத ஒருவர் ஸ்டேடியத்தை திறப்பது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தனர். புதுபிக்கப்பட்ட மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தாமல், டிரம்ப் நிகழ்ச்சிக்கு திட்டமிட்டுள்ளதும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.