ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு ரோஜர் ஃபெடரர் தகுதி

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு ரோஜர் ஃபெடரர் தகுதி

Update: 2019-01-16 12:09 GMT
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் பிரிட்டன் DAN EVANS ஐ எதிர்கொண்ட பெடரர், 7க்கு6,7க்கு6,6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனிடையே 5ஆம் நிலை வீரரான தென்னாப்பிரிக்காவின் கேவின் ஆண்டர்சன் தோல்வியை தழுவினார். 2வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பிரான்சிஸை எதிர்கொண்ட ஆண்டர்சன் 4-6, 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார்.
Tags:    

மேலும் செய்திகள்