ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் - முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா

Update: 2023-08-08 05:09 GMT

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தலா 4 போட்டிகளில் ஆடியுள்ளன. இந்திய அணி 3 வெற்றி 1 சமனுடன் 10 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. 9 புள்ளிகளுடன் மலேசியா 2ம் இடத்திலும், 5 புள்ளிகளுடன் தென் கொரியா 3ம் இடத்திலும் பாகிஸ்தான் 4ம் இடத்திலும் உள்ளன. 2 புள்ளிகளுடன் ஜப்பான் 5ம் இடத்தில் உள்ளது. இந்த 3 அணிகளும் அரையிறுதி ரேஸில் நீடிக்கின்றன. 1 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ள சீனா, தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்