தமிழகத்தில் அனைத்து மகளிருக்கும் எல்லா உரிமையும், உரிமைத் தொகையும் கிடைத்தால் மகிழ்ச்சியே என்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உரிமைத் தொகை பெறும் சகோதரிகள் மகிழ்ச்சி அடைய ஒரு சகோதரனாக தொலைநோக்குப் பார்வையுடன் அன்றே ஜன்தன் வங்கி கணக்கை தொடங்கிய பிரதமர் மோடிக்கு தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். இந்த உரிமைத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவரே பிரதமர் மோடி தான் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.