மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வைகை அணையில் இருந்து உடனடியாக தண்ணீரை திறக்க வேண்டும் என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால், முல்லைப்பெரியாறு அணை 137 அடி நிரம்பிய நிலையில், வைகை அணையில் தண்ணீர் திறக்க மறுப்பது ஏன் என தமது எக்ஸ் தள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். பாசனத்திற்கு தண்ணீர் தர மறுப்பது விவசாயிகளுக்கு தமிழக அரசு இழைக்கும் அநீதி என்று கூறியுள்ள டிடிவி.தினகரன், மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.