விக்கிரவாண்டியில் அதிமுக ஓட்டு யாருக்கு? கணிக்கவே முடியாத கேள்வியின் விடை?

Update: 2024-07-13 05:34 GMT

விக்கிரவாண்டியில் அதிமுக ஓட்டு யாருக்கு?

கணிக்கவே முடியாத கேள்வியின் விடை?

பல்ஸை எகிற விடும் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் ரிப்போர்ட்

82.48% ஓட்டு யார்? யாருக்கு?

மும்முனைப் போட்டியை கண்ட விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி மறைவை அடுத்து... தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளை அள்ளிய திமுக கூட்டணியில் அள்ளிய கையோடு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தது திமுக.

மறுபுறம் தேர்தல் நேர்மையாக நடக்காது என குற்றம் சாட்டி பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிலிருந்து விலகியது.

அதேவேளையில் 13 ஆண்டு காலமாக இடைத்தேர்தலில் போட்டியில்லை என்ற கொள்ளையை ஓரம் கட்டிவிட்டு விக்கிரவாண்டி களத்தில் ராமதாசை இறக்கி விட்டது பாமக. நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி, அபிநயாவை வேட்பாளராக அறிவித்தது.

மும்முனைப் போட்டி கண்ட தொகுதியில் வரலாற்றை திரும்பி பார்க்கையில்... 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் சிபிஎம் வெற்றியை வசமாக்கியது.

2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவும், 2019 இடைத்தேர்தலில் அதிமுகவும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் வென்றது.

அப்போது திமுக வேட்பாளர் புகழேந்தி 93,730 வாக்குகளை பெற்றிருந்தார். அதுவே அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகளை பெற்றிருந்தார். அப்போது அதிமுக கூட்டணியில் பாமகவும், பாஜகவும் இருந்தது. இப்போது களத்தில் அதிதிவீரம் காட்டிய நாம் தமிழர் வேட்பாளர் ஷீபா அஸ்மி 8,216 வாக்குகளை பெற்றிருந்தார். இப்போது பாமகவை அதரிக்கும் அமமுக 3,053 வாக்குகளை பெற்றிருந்தார்.

இதுவே, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி நிலவரத்தை பார்த்த போது திமுக கூட்டணி கட்சியான விசிக 72,188 வாக்குகளையும், அதிமுக 65,365 வாக்குகளையும், பாமக 32,198 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 8,352 வாக்குகளையும் பெற்றிருந்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பிரசார களத்தில் ஆரவாரம் இல்லாமல் சென்றது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்கள் வெளிவர எதிர்க்கட்சிகள் பிரசாரம் சூடுபிடித்தது.

சட்டம் ஒழுங்கு, இடஒதுக்கீடு, ஜாதிவாரியாக கணக்கெடுப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. இதற்கு தமிழக அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தது திமுக. இதில்.. களத்திலிருந்து விலகிய அதிமுக வாக்குகளை எங்களுக்கு போடுங்கள் என அரசியல் கட்சிகள் ஓப்பனாக கேட்டது ஹைலைட்..

பிரசாரம் ஓய... 10 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில்... 82.48% வாக்குகள் பதிவாகியது... தொகுதியில்... வெற்றி யாருக்கு என்ற கேள்வியோடு அதிமுக வாக்கு யாருக்கு...? என்ற கேள்வியும் மேலோங்க.. இதற்கான மக்கள் தீர்ப்பு இன்று வெளியாகிறது

Tags:    

மேலும் செய்திகள்