திடீரென வீட்டு மதில் சுவரில் ஏறிய விஜய்.. இரவில் நடந்த பரபரப்பு காட்சிகள்

Update: 2024-07-04 04:56 GMT

கல்வி விருது வழங்கும் விழா முடிந்த பிறகு வீடு வரை வந்த ரசிகர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், கையசைத்து, வணங்கி விடைபெற்றார். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. சுமார் 9 மணி நேரம் நின்று மாணவ மாணவியருக்கு விருதுகளை வழங்கி முடித்த பின், இரவு 7.30 மணிக்கு விழா நிறைவுற்றது. இதையடுத்து வீடு திரும்பிய விஜயுடன் தொடர்ந்து வந்த ரசிகர் பட்டாளம், வாசலில் நின்று கூச்சலிட்டனர். இதையடுத்து வீட்டு மதில் சுவரில் உட்புறத்தில் அமைக்கப்பட்ட படிக்கட்டு வழியாக மேலே ஏறி விஜய், ரசிகர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்