அமைச்சர் உதயநிதி கூட்டத்தில் சரிந்து விழுந்த ஸ்பீக்கர் - வேலூரில் பரபரப்பு
வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆம்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அவரது வருகையின் போது கூட்ட நெரிசலால் மேடை அருகில் அமைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் சரிந்து சாய்ந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட தொண்டர்கள், ஸ்பீக்கரை தாங்கி பிடித்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனால் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.