உத்தரப்பிரதேசத்தில், பாஜக நிர்வாகி ஒருவர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, சுல்தான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நாளை ஆஜராகிறார். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு, அமேதியில் உள்ள பாபுகஞ்ச் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பங்கேற்கின்றனர். நாளை அவதூறு வழக்கில் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில், ராகுல்காந்தி ஆஜராவதால், காலையில் பாரத்ஜோடோ யாத்திரை நிறுத்தப்படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். நாளை பிற்பகல் 2 மணிக்கு, அமேதியின் ஃபர்சத்கஞ்ச் பகுதியில் யாத்திரை தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.