மாநாட்டில் தொலைந்த மகன்.. 1 நாளுக்கு பின் வந்த அதிர்ச்சி மெசேஜ்.. ஏரியாவே பதற்றத்தில்.. கதறிய தாய்

Update: 2024-10-29 10:04 GMT

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கல்லூரி மாணவர் ஒருவர் மாயமான பரபரப்பு சம்பவத்தில், அவர் மீட்கப்பட்டிருக்கிறார். மாணவருக்கு நேர்ந்தது என்ன?.. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

தவெக மாநாடு செல்வதாக கூறிச் சென்ற தங்களின் மகன் காணாமல் போனதை அறிந்து பதறிப்போன குடும்பத்தார், பெரும் களேபரத்திற்கிடையே வீடு திரும்பிய மகனை கண்ணீர் மல்க வரவேற்று அரவணைத்திருக்கின்றனர்...

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவ சமுத்திரத்தை சேர்ந்தவரான மகேஷ்வரன், 18 வயதேயான கல்லூரி மாணவர்..

இவர், தன் பகுதியை சேர்ந்தவர்களுடன் தவெக மாநாட்டில் கலந்து கொண்ட நிலையில், பின்னர் அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி மாயமானது உடன் வந்தவர்களை பதறச் செய்திருக்கிறது...

உடனடியாக, மகேஸ்வரனை கண்டுபிடித்து தருமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்..

இதனிடையே, செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை எனவும், தான் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே நிற்பதாகவும் கூறி தன் உடன் வந்தவர்களில் ஒருவருக்கு மகேஸ்வரன் மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.

இந்நிலையில், நீண்ட நேரமாக டோல்கேட்டில் காத்து கொண்டிருந்த மகேஸ்வரன், பின்னர் டிரக் ஒன்றில் லிஃப்ட் கேட்டு ஏறி.. தன்னை கிருஷ்ணகிரியில் இறக்கி விடுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதில், மகேஸ்வரன் தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும், ஓட்டுநரும் நினைவில்லாமல் சேலம் மாவட்டம் தலைவாசலுக்கு வந்து மகேஸ்வரனை இறக்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சேலம் வருவதற்கு மட்டுமே பணம் சரியாக இருந்ததாக கூறி, சேலத்தில் இறங்கி செய்வதறியாமல் தவித்த தன்னை, முதியவர் ஒருவர், உணவு வாங்கி கொடுத்து, கிருஷ்ணகிரி செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பியதாகவும் மாணவர் தெரிவித்திருக்கிறார்.

மாநாடு நடந்து முடிந்து மறுநாள் மாலை 6 மணியளவில் வீடு திரும்பிய மாணவரை கண்டு, நிம்மதி பெருமூச்சு விட்ட குடும்பத்தார், மகனை கண்ணீர் மல்க ஆரத்தழுவி.. ஆராதனை எடுத்து வரவேற்றிருக்கின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்