சிறு, குறு தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் இன்று அமைச்சர் பேச்சுவார்த்தை.. வெளிவர போகும் முடிவு என்ன?

Update: 2023-09-26 03:36 GMT

மின் கட்டண உயர்வு தொடர்பாக கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறு ,குறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று பேச்சுவார்த்தை

நடத்த உள்ளார்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண குறைப்பு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதை ஏற்காமல்

புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனனத்தினர் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நாளை மாலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிண்டியில் உள்ள சிட்கோ வளாகத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளார். இதில் சுமுக முடிவு எட்டப்பட்டால் மின்கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்