காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- அரியானாவில் 1 புள்ளி 79 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி பெற்ற நிலையில், புள்ளி 85 சதவீத வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க.விடம் அரியணையை பறி கொடுத்தது, காங்கிரஸ்... தமிழகத்தில் 2016ம் ஆண்டு வெற்றியை தி.மு.க. பறி கொடுத்தது போலவே நடந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து...
- ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 42 இடங்களை கைப்பற்றிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராகிறார்... தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி.... பாஜக 29 தொகுதிகளை பெற்று பிரதான எதிர்க்கட்சியாகிறது...
- பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு... அரியானாவில், காங்கிரஸ் கட்சிக்கு விவசாயிகள் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும், 370வது சட்ட பிரிவு நீக்கப்பட்டதால் காஷ்மீர் பற்றி எரியவில்லை என்றும் பேச்சு...
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்நாக்கில் 2 ராணுவ வீரர்களை கடத்திச் சென்ற தீவிரவாதிகள்.... ஒரு ராணுவ வீரர் தப்பி வந்த நிலையில், மற்றொரு வீரரை தேடும் பணியில் பாதுகாப்புப்படை தீவிரம்....
- புனரமைக்கப்பட்ட சென்னை மெரினா நீச்சல் குளத்தை, பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்... இளைஞர்கள் உற்சாக குளியல்...
- திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழை... சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியதால் பொதுமக்கள் அவதி...
- சரஸ்வதி பூஜையையொட்டி சென்னை எழும்பூர், கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்... எழும்பூரில் இருந்து 10 மற்றும் 12ம் தேதிகளிலும் கன்னியாகுமரியில் இருந்து 11 மற்றும் 13ம் தேதிகளிலும் புறப்படும் என அறிவிப்பு...
- த.வெ.க மாநாட்டுக்கான நிபந்தனைகள் தொடர்பாக, போலீஸ் அதிகாரிகளை சந்தித்தார் புஸ்சி ஆனந்த்... மாநாட்டிற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்பது உள்ளிட்ட விபரங்களை டிஐஜி திஷா மித்தலிடம் வழங்கினார்....
- கட்சி மாநாட்டுக்கு யாரையும் அழைக்க வேண்டாம் என ஒரு அண்ணனாக விஜய்யிடம் கூறியதாக சீமான் தகவல்... விஜய் கட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு வந்ததா? என்பது குறித்தும் விளக்கம்...
- ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால், அ.தி.மு.க. கட்சிப் பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கம்... கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வாக உள்ள தளவாய் சுந்தரம், கட்சியின் கொள்கை, குறிக்கோளுக்கு முரணாக செயல்பட்டதாக தலைமை நடவடிக்கை...
- அ.தி.மு.க.வில், தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு என ஓ.பி.எஸ் கருத்து... பிற அமைப்பு விழாக்களில் பங்கேற்க கூடாது என அ.தி.மு.க.வில் சட்ட விதிகள் இல்லை என்றும் விளக்கம்...
- தமிழகத்தில், சொத்து வரி, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் முதல் முறையாக உயர்த்தப்பட்டது... அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு...
- அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஜோ ஹாப்ஃபீல்டு, கனடாவை சேர்ந்த ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு... நரம்பியல் தொடர்பான செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கும் பகிர்ந்தளிப்பு...
- மகளிர் டி 20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா, இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை... துபாயில் நடைபெறும் போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்தால் அரை இறுதிக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகும்...