காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-24 00:56 GMT
  • சென்னையில் அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இரவில் வெளுத்து வாங்கிய கனமழை...போரூர், மதுரவாயல், செங்குன்றம், திருவொற்றியூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழையால் குளிர்ச்சியான சூழல்...
  • உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது, பயங்கரவாதம்..... அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா. சபை மாநாட்டில் உரை... 
  • சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவதற்கே அச்சப்படுகிறார், பிரதமர் மோடி... எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்....
  • நாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி... சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்... 
  • சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா... ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தானும் கலந்து கொள்ள இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு... 
  • சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை‌ செயல்படுத்த, கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்... தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு...
  • போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு... அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசு அதிரடி உத்தரவு...
  • சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதி.... இசைவு ஆணையை புதுப்பித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு...
  • ஜம்மு - கஷ்மீரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது... 26 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு... 
  • திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்திருந்தால் தனது குடும்பமே நாசமாக போகட்டும்...திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் கற்பூரம் ஏற்றி சத்தியம்... 
  • திண்டுக்கல்லை சேர்ந்த நெய் தயாரிப்பு நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்... திருப்பதி லட்டு நெய் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவு... 
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத சேலம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிடி வாரண்ட்... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு....
  • ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலிக்கு உற்சாக வரவேற்பு... சென்னை செஸ் ஒலிம்பியாட் தந்த அனுபவமே வெற்றிக்கு காரணம் என நெகிழ்ச்சி... 
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்குகிறது, மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்... 'Whatever It Takes' என்ற பாடலை வெளியிட்டது, ஐ.சி.சி....
Tags:    

மேலும் செய்திகள்