காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-31 01:03 GMT
  • தமிழகத்தில் சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை... பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.....
  • மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த‌தற்கு மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி... சிவாஜியின் பாதங்களில் தலை வைத்து மன்னிப்பு கேட்பதாக பேச்சு... 
  • அமெரிக்காவில் 900 கோடி ரூபாய் மதிப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்... தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...
  • தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஃபார்முலா-4 இரவு நேர கார் பந்தயம் இன்று தொடக்கம்.....மூன்றரை கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் நடைபெறும் பந்தயத்திற்காக சிறப்பான ஏற்பாடு....
  • ஃபார்முலா 4 கார் பந்தயத்தை காணவரும் ரசிகர்களுக்கு, 12 வகையான பொருட்களை கொண்டுவர தடைவிதிப்பு.... வெளி உணவு, ஆயுதங்கள், புகையிலைப் பொருட்கள், குடை, செல்லப்பிராணிகள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதியில்லை என்று அறிவிப்பு......
  • ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் பகுதியில் ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேரில் ஆய்வு..... கார் பந்தயத்தை திட்டமிட்டபடி பாதுகாப்புடன் நடத்தி முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.... 
  • தேசிய நெடுஞ்சாலை என்பதால், விக்கிரவாண்டி அருகே விஜய் கட்சி மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல்... சென்னையில் இருந்து தனி விமானம் முலம் சீரடி சென்றார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்...
  • திருப்பத்தூரில், தொழில் அதிபர் கடத்தில் வழக்கில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது... கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கி கட்சித் தலைமை அதிரடி... 
  • நாகையில் இருந்து பைபர் படகில் சென்ற 4 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் பட்டா கத்தியுடன் தாக்குதல்.. 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து அட்டூழியம்... 
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் போக்குவரத்து நெரிசல்.... வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி..... 
  • சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 19 விமானங்களின் சேவையில் பாதிப்பு.... விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம், பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.....
  • திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை.... வாணியம்பாடியில் கனமழையின் போது மரங்கள் விழுந்ததால் 2 வீடுகள் சேதம்... 
  • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளம்.... இரவு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பு.. 
  • வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது... வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி நகரக்கூடும் என்றும் தகவல்.. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு....
  • ஹேமா கமிட்டி அறிக்கையில் மறைக்கப்பட்ட பக்கங்கள் உள்பட முழு நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்... கேரள மாநில முதன்மை செயலாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு... 
  • பாரிஸ் பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி... இந்திய வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று அசத்தல்... 
  • நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.... செப்டம்பர் 5ம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று 4வது பாடலை வெளியிடுகிறது படக்குழு.... 
Tags:    

மேலும் செய்திகள்