தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்பது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 21 புதிய பேருந்துகள் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதற்கட்டமாக சென்னையில் அடுத்தவாரம் முதல் தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறினார்.