``அவர் `தியாகி' என்றால், இவர்கள் எல்லாம் துரோகிகளா?'' - ராமதாஸ்

Update: 2024-09-30 10:23 GMT

செந்தில் பாலாஜி தியாகி என்றால், பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் துரோகிகளா? என கேள்வி பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,15 மாத சிறை தண்டனை அனுபவித்தது செந்தில்பாலாஜி தியாகம் செய்தது போல் முதலமைச்சர் நேற்று அறிக்கை வெளிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

செந்தில் பாலாஜியை முதலமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும் போது, அவர் மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை என்று கூறியுள்ளார். எனவே, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கு நீதிபதியாக இருக்க வேண்டிய முதலமைச்சர் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்