கோவையில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், லங்கா கார்னர், அரசு மருத்துவமனை, வாலங்குளம் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்று முத்துசாமி ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மீண்டும் அப்பகுதிகளில் நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து உபரிநீர் செல்லும் ராஜவாய்க்கால் 50 கோடி செலவில் அகலப்படுத்தப்படும் என்று கூறினார்.